Advertisment

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: செஃப் வெங்கடடேஷ் பட் ஸ்டைல் முருங்கைக்கீரை சாதம்: குழந்தைகள் ரொம்ப விரும்புவாங்க!

சட்டென்று சுவையான சத்தான லஞ்ச் பாக்ஸ் ரெசிபிக்கு செஃப் வெங்கடடேஷ் பட் ஸ்டைலில் முருங்கைக்கீரை சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
moringa rice

முருங்கை கீரை சாதம்

முருங்கை கீரை என்றாலே அதன் சத்துக்கள் எண்ணில் அடங்காதவை அவ்வளவு சத்துக்கள் முருங்கை கீரையில் அடங்கியுள்ளது. நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படியாக முருங்கை கீரையின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.

Advertisment

அப்படியாக இரும்பு சத்து அதிகமுள்ள முருங்கை கீரையை வைத்து ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கை கீரை
துவரம் பருப்பு
பாசிப் பருப்பு
அரிசி
மஞ்சள் தூள்
எண்ணெய் 
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
காய்ந்த மிளகாய்
பூண்டு
சீரகம்
கொத்தமல்லி
வெள்ளை எள்
பெருங்காயத்தூள்
புளி
மிளகு
கடுகு
வேர்க்கடலை
முந்திரி
கறிவேப்பிலை 
கொத்தமல்லி தழை
உப்பு

Advertisment
Advertisement

செய்முறை

சுத்தம் செய்யப்பட்ட முருங்கை கீரை, துவரம் பருப்பு, பாசி பருப்பு, அரிசி, தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதை வேறொரு பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதே எண்ணெயில் சீரகம், கொத்தமல்லி, வெள்ளை எள், பெருங்காயத்தூள், சிறிது புளி, மிளகு சேர்த்து வதக்கவும். 

இவை அனைத்தும் நன்கு வதங்கி ஆறியதும் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.

Murungai Keerai Baath | healthy lunch box recipe | bachelors quick meal | Chef Venkatesh Bhat

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வேர்க்கடலை, முந்திரி, சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கலந்து சிறிது நேரம் வேகவிட்டு இறக்கினால் முருங்கை கீரை சாதம் ரெடியாகிவிடும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Moringa Leaves Benefits of consuming moringa leaves
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment