நரம்புத் தளர்ச்சி என்பது நரம்புகள் பலவீனமடைந்து, உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் செயல்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. இது பொதுவாக கைகால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, வலி, பலவீனம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
சில சமயங்களில், இது தசைச் சுருக்கங்கள், நடுக்கம், ஒருங்கிணைப்பு இழப்பு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். இதுகுறித்து மருத்துவர் அருண்குமார் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நரம்புத் தளர்ச்சி வராமல் தடுக்க நம் உணவில் முக்கியமாக மாப்பிளை சம்பா சேர்த்து கொள்ள வேண்டும். இதில் உள்ள தைமின் நரம்பு கோளாறுகள், பலவீனம் வராமல் தடுக்கும். இதில் இரும்புச்சத்து உள்ளது. தினமும் இரண்டு வேலை சாப்பிடுவதால் 6 மி.கி இரும்புச்சத்து கிடைக்கும் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
அதுமட்டுமின்றி ஆண்களுக்கு உடல் பலத்தை அதிகரிக்கவும், ஆண்மை குறைபாடு பிரச்சனையை போக்கவும் மாப்பிள்ளை சம்பா அரிசி உதவுகிறது. எனவே ஆண்கள் மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மாப்பிள்ளை சம்பா உண்மையில் ஆரோக்கியமானதா? | Dr. Arunkumar
பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் முழு தானிய வகைகள் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு, நரம்புகளுக்கும் வலுவூட்டும். மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் சோர்வை நீக்கி சுறுசுறுப்பாக இருக்க உதவுவதோடு, நரம்புகளுக்கும் வலுக்கொடுக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.