தற்போது தான் காலநிலை அப்படியே மாற்றமடைந்து வெயில்காலம் ஆரம்பிக்கிறது. இந்த நேரத்தில் பல குழந்தைகளுக்கு மூக்கடைப்பு பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு ஏற்ற ஒரு சரியான லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஹோம் குக்கிங் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது போன்று வீட்டிலேயே மிளகு சாதம் சுவையாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
மிளகு
சீரகம்
எண்ணெய்
நெய்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
முந்திரி பருப்பு
பெருங்காய தூள்
பூண்டு
வெங்காயம்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
உப்பு
சாதம்
மிளகு சீரக தூள்
செய்முறை
ஒரு மிக்சர் ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.
அவை வறுந்து வந்ததும் மெல்லியதாக நறுக்கிய பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கவும்.
மிளகு சாதம் | Milagu Sadham | Milagu Sadham Recipe | Variety Rice Recipes | Lunch Recipes
கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து உப்பு சேர்த்து கலக்கவும். பொடியாக அரைத்த மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலந்து விடவும். வேகவைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும். மேலும் சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து இறக்கினால் அவ்வளவு தான் சுவையான மிளகு சாதம் தயார்.