சிறுதானியங்கள் உடலுக்கு அவ்வளவு நல்லது. சிறுதானியமான திணை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் இனி திணை மாவு சப்பாத்தி அதற்கு கம்பினேஷனாக கருப்பு உளுந்து கிரேவி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து
ராஜ்மா
உப்பு
மஞ்சள் தூள்
வெங்காயம்
இஞ்சி
பச்சை மிளகாய்
தக்காளி
நெய்
சீரகம் பூண்டு
கொத்தமல்லித்தூள்
மிளகாய்த்தூள்
கொத்தமல்லி தழை
கரம் மசாலா
செய்முறை
ஒரு கிளாஸ் கருப்பு உளுந்து, கால் கிளாஸ் ராஜ்மா இரண்டையும் நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைக்கவும். பின்னர் ஒரு குக்கரில் இரண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் அதனுடன் நறுக்கிய வெங்காயம் இடிச்ச இஞ்சி, பச்சை மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவும்.
ஒரு கொதி வந்ததும் குக்கர் மூடி போட்டு விசில் போட்டு விடவும் பின்னர் பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும். குக்கரில் வைத்த பருப்பு எடுத்து நன்கு மசித்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் நெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும் அதில் கொத்தமல்லித்தூள், மிளகாய்த்தூள், நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, உப்பு சேர்த்து வதக்கி அதன் மேல் சிறிது கொத்தமல்லி தழைகளையும் தூவி தண்ணீர் விட்டு சிறிது நேரம் வேக விடவும்.
தக்காளி நன்கு மசிய வதங்கியதும் வேகவைத்த கருப்பு உளுந்து எடுத்து அதில் ஊற்றி கலந்து விடவும் பின்னர் அதில் கரம் மசாலா சேர்த்து கலந்து விட்டு மிதமான சூட்டில் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
திணை
ஜவ்வரிசி
செய்முறை
திணை அரிசி எடுத்து கழுவி வடிகட்டி ஒரு வெள்ளைத் துணியில் அதை போட்டு தண்ணீர் அனைத்தையும் வற்றி எடுக்கவும். பின்னர் அதை ஒரு கடாயில் சிறிது நேரம் வறுக்கவும். சிறிது ஜவ்வரிசியை கடாயில் வறுத்து திணை அரிசியுடன் சேர்த்து ஆறவைத்து மிக்ஸியில் மைய பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
இனி அடிக்கடி செய்வீங்க பத்து கூட சாப்பிடலாம் | Breakfast recipe | Millet chapati | Dal makhani tamil
இப்போ ஒரு கடாயில் சிறிது சுடுதண்ணீர் ஊற்றி இந்த மாவை போட்டு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சப்பாத்தி வடிவில் திரட்டி எடுக்கவும்.
பின்னர் இதை தோசை கல்லில் எப்போதும் போல சுட்டு கிரேவி வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.