சிறுதானியத்தை வைத்து என்ன சமைப்பது என்று தெரியாமல் இருப்பவர்கள் அரிசி மாவு இட்லி, தோசைக்கு பதிலாக இனி சிறுதானிய இட்லி, தோசை செய்யலாம்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை காலை இரவு உணவு நேரங்களில் எடுத்து கொள்ளலாம்.
சிலர் சிறுதானியத்தை வைத்து இட்லி செய்யும்போது இட்லி புளித்து விடும் இல்லை என்றால் கல்லு மாதிரி ஆகிவிடும் என்பதால்தான் நிறைய பேர் செய்ய தயங்குகிறார்கள். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம் பஞ்சு போல இட்லி, தோசைக்கு ஏற்ப சிறுதானியம் வைத்து மாவு எப்படி அரைப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு
கேழ்வரகு
வெள்ளைச்சோளம்
கருப்பு கவுணி அரிசி
உளுந்து
வெந்தயம்
இட்லி அரிசி
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
கம்பு, கேழ்வரகு, வெள்ளைச்சோளம், கருப்பு கவுனி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஊற வைக்க வேண்டும். சிறுதானியங்களை நன்கு கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.
பின்னர் உளுந்தை தனியாக கழுவி ஊற வைத்து பிரிட்ஜில் வைக்கவும். பிறகு வெந்தயத்தை தனியாக ஊற வைக்க வேண்டும்.
நான்கு முதல் ஐந்து மணி நேரம் இவை அனைத்தும் நன்றாக உரியதும் ஒரு கிரைண்டரில் முதலில் வெந்தயத்தை மைய அரைத்து பிறகு உளுந்து சேர்த்து அரைக்கவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சிறுதானியங்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பின்னர் அதனை கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும். அரைத்த உளுந்து மற்றும் சிறுதானிய மாவை நன்கு கரைத்து ஒரு எட்டு மணி நேரம் புளிக்க வைத்து பின்னர் இட்லி, தோசை ஊற்றி சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“