சிறு தானியங்களில் புரதம், எளிதில் கரையும் நார்ச்சத்து. வைட்டமின் பி, மாங்கனீசு என அனைத்து முக்கியமான சத்துக்களும் உள்ளன. அப்படி பட்ட சிறுதானியங்களை வைத்து கஞ்சி செய்து சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் விளக்கி கூறுகிறார்.
கம்பு, ராகி, தினை, குயினோவா ஆகியவை சிறு தானியங்களில் அடங்கும். அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கோதுமை மற்றும் அரிசி போன்ற பொதுவான தானியங்களுடன் ஒப்பிடும்போது, சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
அளவற்ற சத்துக்கள் கொடுக்கும் சிறுதானிய கஞ்சி | Dr.Sivaraman speech on sirudhaniya kanji | Millet
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்றத்தை தூண்டும் ஆற்றல் சிறுதானியங்களுக்கு உண்டு. ஏனெனில், இவற்றில் மாவுச்சத்து குறைவாக உள்ளது. சிறுதானியங்களில் அதிக அளவுள்ள நார்ச்சத்து வயிற்றை சுத்தப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு, சிறுதானியங்களை உட்கொள்வது நல்ல பலன் கொடுக்கும். ஏனெனில், இவற்றில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளன. சிறுதானியங்களை கஞ்சியாக காய்ச்சி குடிக்கலாம். இதில் இட்லி, தோசை, பலகாரம் என சுவையாக செய்து சிறுவயது முதலே குழந்தைகளுக்கு இதை கொடுத்து பழக்கலாம். உடலை உறுதியாக வைத்து கொள்ள உதவும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.