வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. சளி, கப கோளாறுகளுக்கும் புதினா நல்ல மருந்தாகும். மணமூட்டியாக சமையலைக் கமகம ஆக்கும் புதினாவை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
புதினா
பச்சைமிளகாய்
பூண்டு
இஞ்சி
உப்பு
கடுகு
கருவேப்பிலை
புளி
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் 2 நறுக்கிய சின்ன வெங்காயம், 1 துண்டு இஞ்சி, 2 பல் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் புதினா இலை சேர்த்து வதக்கவும்.
வதக்கி வைத்த பொருட்களை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து, அதனுடன் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் , தேவையான அளவு உப்பு, பொட்டு கடலை சிறிதளவு சேர்த்து அரைக்கவும்.
இப்போது தாளிப்பதற்கு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து, கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு அரைத்து வைத்த சட்னியை ஊற்றவும்.
அவ்வளவு தான் இட்லி தோசை, வெரைட்டி ரைஸ் செய்ய புதினா சட்னி ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“