புதினா என்பது நமக்கு புத்துணர்வை கொடுக்கும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் புதினாவை தினமும் எடுத்துகொண்டால் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும். இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இது உடலை சேதத்திலிருந்து நம்மை காப்பற்றும். இதன் நல்ல மணம் நமது மூளையை தூண்டும்.
Advertisment
இதனால் நன்றாக யோசித்து செயலாற்றும் வேலை மூளையில் நடைபெறும். இவ்வளவு நன்மைகள் நிறைந்த புதினாவை வைத்து சட்னி செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு பூண்டு இஞ்சி புளி சிவப்பு மிளகாய் தேங்காய் கறிவேப்பிலை புதினா இலை கல் உப்பு பெருங்காய தூள் கடுகு சீரகம்
Advertisment
Advertisements
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். மிதமான சூட்டில் சுமார் 3 நிமிடங்கள் வதக்கவும். 2. பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்க்கவும். புளி துண்டுகள், சிவப்பு மிளகாய் மற்றும் தேங்காய் துண்டுகள் சேர்க்கவும்.
சுமார் 3 நிமிடங்கள் வதக்கி பின்னர் கறிவேப்பிலை சேர்க்கவும். புதினா இலைகளை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். கல் உப்பு மற்றும் பெருங்காய தூள் சேர்க்கவும். இலைகள் சுருங்கியதும், அடுப்பை அணைத்து, பொருட்களை முழுவதுமாக ஆறவிடவும்.
ஆறிய பொருட்களை மிக்சி ஜாடிக்கு மாற்றி சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான, கலவையாக அரைக்கவும். சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். தாளிக்க, ஒரு பான் எடுத்து, எண்ணெய் சேர்க்கவும். உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.
கடுகு பொரிந்ததும், சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை அணைத்து, சட்னியில் ஊற்றவும். அவ்வளவு தான் சுவையான புதினா சட்னி சாதம் அல்லது உங்களுக்கு விருப்பமான டிஃபினுடன் சூடாக பரிமாற தயாராக உள்ளது.