நாம் உணவில் பயன்படுத்தும் புதினா இலைகள் செரிமானத்திற்கு உதவுகிறது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது சளி மற்றும் பலவற்றிற்கு சிகிச்சையளிக்கிறது. இப்படியான புதினாவின் மேலும் பல நன்மைகளை தருகிறது என்று மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார். மேலும் இதுகுறித்து அவர் உஷா நந்தினி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
புதினா வயிற்றுச் சூட்டை தணிக்கிறது மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது. அல்சர் மற்றும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாக அமைகிறது.
புதினா இயற்கையாகவே உடல் வெப்பத்தை தணிக்க உதவும் மூலப்பொருட்களை கொண்டுள்ளது. எனவே இது பெரும்பாலும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியுடன் தொடர்புடைய வீக்கம் மற்றும் வெப்பநிலை உயர்வைக் குறைக்கும். மேலும் புதினா இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகிறது.
நமது வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த புதினா உதவுகிறது. இது கிருமி நாசினி குணங்களை கொண்டிருப்பதால் விரைவாக சுவாசத்தை புதுப்பிக்கிறது. இது வாய்க்குள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பதன் மூலமூம் நாக்கு மற்றும் பற்களை சுத்தம் செய்வதன் மூலமூம் வாய் ஆரோக்கியத்தை பேணுகிறது. எனவே இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த புதினாவில் சட்னி செய்வது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
கடலை பருப்பு,
உளுந்து,
சீரகம்,
சின்ன வெங்காயம்,
தக்காளி,
பூண்டு,
கொத்தமல்லி தண்டு,
புளி,
தேங்காய்,
கறிவேப்பிலை.
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சிறிதளவு சேர்க்க வேண்டும். இந்த எண்ணெய் சூடாகி வரும் போது ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, கால் ஸ்பூன் உளுந்து, கால் டீஸ்பூன் சீரகம், ஒரு கப் சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
இவை வதங்கி வரும் போது இரண்டு தக்காளி, 6 பல் பூண்டு, ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இதன் பின்னர், புதினா, கொத்தமல்லி தண்டு, தேவையான அளவு உப்பும் சேர்க்க வேண்டும். இதில் தக்காளி குழைவாக வந்த பின்னர் சிறிதளவு தேங்காய் மற்றும் கொஞ்சமாக புளி சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும். இறுதியாக இவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
கருப்பை நோய்களுக்கு மருந்தாகும் புதினா! | Dr M.S Usha Nandhini
மறுபுறம், சிறிதளவு எண்ணெய்யில் கடுகு, உருட்டு உளுந்து, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இதில், அரைத்து வைத்திருந்த சட்னியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான புதினா சட்னி தயாராகி விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.