லஞ்ச் பாக்ஸ்க்கு ஒரு சூப்பர் ரெசிபி அதுவும் வேண்டான்னு சொல்லாத மாதிரி ஒரு ரெசிபி செக் வெங்கடேஷ் பட் ஸ்டைல்ல எப்படி செய்யறதுன்னு அவரோட யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான புதினாவை வைத்து புதினா சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். புதினா சாதம் மிகவும் ஈஸியாக சட்டுனு செய்யும் மாதிரியான ஒரு சாதம். இதனை லஞ்ச் பாக்ஸிற்கு செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் உளுந்து பச்சை மிளகாய் கருவேப்பிலை பூண்டு புதினா புளி கரைசல் நெய் கடுகு முந்திரி வெங்காயம் உப்பு சாதம் நெய்
Advertisment
Advertisements
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து எண்ணெயில் வறுக்கவும். பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள புதினாவையும் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு திக்காக கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்துக் கொள்ளவும். இவற்றை கலந்து ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இன்னொரு கடாயில் நெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். தேவைப்பட்டால் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும். கருவேப்பிலை, நசுக்கிய பூண்டு சேர்த்து வறுக்க வேண்டும்.
அடுத்ததாக இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் இதில் அரைத்து வைத்துள்ள புதினா விழுதை சேர்த்து சிறிது உப்பு போட்டு சாதத்தை கொட்டி கிளறவும். சுவையை இன்னும் கூட்ட மேலே நெய் சேர்த்து பரிமாறலாம் சுவையாக இருக்கும்.