/indian-express-tamil/media/media_files/2025/03/25/zyIkBUimpvOnhrcxuQ6t.jpg)
இரத்தசோகைக்கு நிரந்தர தீர்வு
பெண்களுக்கு இரத்த சோகை (Anemia) ஒரு பொதுவான சிக்கலாக உள்ளது. மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு, தேவையான சத்துக்கள் குறைவாக உள்ள உணவுகளைத் தேர்வு செய்வது, மற்றும் சரியான உணவுப் பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் ஹீமோகுளோபின் அளவு குறைந்து பலபேர் ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு இரத்தசோகையில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய முக்கியமான உணவுகள் சிலவற்றை பற்றி டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
இரத்த சோகையை சரிசெய்ய வேண்டிய முக்கிய உணவுகள்:
1. முருங்கைக்கீரை – கால்சியம், இரும்புச் சத்து மற்றும் புரதத்திற்கான சிறந்த மூலப்பொருள்
2. மனத்தக்காளி & சுண்டைக்காய் – செரிமானத்திற்கு உதவி செய்து, இரும்புச் சத்து அளவை அதிகரிக்க உதவும்
3. கருவேப்பிலை கஷாயம் – இரும்புச் சத்து அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் வளர்க்கவும் உதவும்
4. நாட்டு மாதுளை, அத்தி & பேரிச்சம்பழம் – இயற்கையான இரும்புச் சத்து மற்றும் உடல் சக்திக்கான சிறந்த தேர்வு
5. முளைகட்டிய பச்சை பயறு & எள்ளு துவையல் – புரதம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாகக் கொண்ட உணவுகள்!
6. கேழ்வரகு & இரும்புச் சத்து அதிகமான உணவுகள் – ஹீமோகுளோபினை உயர்த்த உதவும்
7. வைட்டமின் C அதிகம் கொண்ட பழங்கள் – எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்றவை, இரும்புச் சத்து உறிஞ்சுதல் அதிகரிக்க பயன்படும்
இவை அனைத்தையும் உணவில் சேர்த்தால், இரத்த சோகையை முற்றிலும் தடுப்பதோடு, ஆரோக்கியமான முறையில் ஹீமோகுளோபின் அளவைக் கட்டுப்படுத்தலாம். மேலும் மாதவிடாய் வலி அதிக உதிரப்போக்கையும் கட்டுப்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.