முருங்கையின் காய், இலை, பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்புச்சத்து முதல் எலும்பு ஆரோக்கியம் என நிறைய சத்துக்கள் நிறைந்த முருங்கையினை எப்படி சாப்பிட்டால் என்னென்ன பயன்கள் என்று மருத்துவ உஷா நந்தினி தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
முருங்கைக் கீரையில் நிறைய அமினோ அமிலங்கள் உள்ளன. அது மட்டும் இன்றி செல்களை புதுப்பிக்கக்கூடிய தன்மையும் அதற்கு உண்டு என்கிறார் மருத்துவர்.
முருங்கையை நெய் விட்டு வதக்கி கீரையாக சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். நரம்பு மண்டலம் வலுவாக இருக்கும்.
Hormone பிரச்சினைக்கு முருங்கை கீரை!
முருங்கைப்பூவை பாலில் போட்டு கொதிக்க விட்டு குடித்தால் ஆண்களுக்கு உயிரணுக்களும் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி சீராகவும் இருக்கும்.
அதேபோல முருங்கைக்கீரை பொடியாகவோ அல்லது சூப் வைத்து எடுத்துக் கொள்ளும்போது எலும்புகள் வலுவாகும். பெண்களுக்கு ஹார்மோன்களை சீராக வைக்க உதவும். முருங்கைக் கீரையை பொடியாக செய்து வைத்து தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன்கள் சீராக இருக்கும் என்கிறார் மருத்துவர் உஷா நந்தினி.
அதேபோல முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து நிறைய உள்ளதால் இரத்த சோகை பெண்களுக்கு உண்டாகும் உதிர போக்கு ஆகியவற்றை குணமாக்கும். தாய்ப்பால் சுரப்புக்கும் உதவியாக இருக்கும்.
முகம் பொலிவு பெறவும் முருங்கை சாறு, எலுமிச்சம் சாறு இரண்டையும் நன்றாக கலந்து முகப் பருக்களுக்கு தடவினால் பருக்கள் மறைந்து விடும். முருங்கை இலையை நன்றாக அரைத்து வீக்கங்களுக்கு பற்று போட்டால் வீக்கம் குறையும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.