இரத்த சோகைக்கு மிகச் சிறந்த உணவாக முருங்கை கீரை பார்க்கப்படுகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கை கீரையில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் முருங்கை கீரை பணியாரம் சாப்பிட்டு இருக்கிறீர்களா?
விஜய் டிவி பிரியங்கா ஸ்டைலில் முருங்கை கீரை பணியாரம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை
வாழைப்பூ
எண்ணெய்
கடுகு
சீரகம்
கருவேப்பிலை
பூண்டு
வெங்காயம்
நெய்
ரவை
பேக்கிங் சோடா
மஞ்சள் தூள்
காய்ந்த மிளகாய்
எலுமிச்சை பழம்
உப்பு
புளி
தேங்காய் துருவல்
செய்முறை
முதலில் முருங்கை இலைகளை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பின்னர் இதேபோல வாழைப்பூவையும் சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் கீரையை சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் வாழைப்பூ வையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து பணியாரம் ஊற்ற ஓரு பவுலில் ரவை,உப்பு, பேக்கிங் சோடா, தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். அந்த கீரையில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி சிறிது நெய் விட்டு வேகவிட்டு இறக்கவும்.
Murungai Ilai Stuffed Kuzhi Paniyaram | CWC Series
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது புளி, தேங்காய் துருவல், பூண்டு, பெருங்காயம், சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் புளிப்பு சட்னி ரெடியாகிவிடும்.
ஒரு பணியார சட்டியில் நெய் ஊற்றி ரவையை பாதி ஊற்றி மேலே முருங்கை கீரை துவையலை சேர்த்து மிதமான சூட்டில் வேகவிடவும் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுக்கவும்.
தயார் செய்யப்பட்ட முருங்கை கீரை பணியாரத்தை புளிப்பு சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“