முருங்கையின் காய், இலை, பூ என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இரும்புச்சத்து முதல் எலும்பு ஆரோக்கியம் என நிறைய சத்துக்கள் நிறைந்த முருங்கையில் பொடி செய்வது எப்படி என்று ஏ.பி.கே விலாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை மிளகு உப்பு சீரகம்
செய்முறை
Advertisment
Advertisements
அதற்கு முதலில் முருங்கை இலை எடுத்து அதன் காம்புகளை நீக்கி இலைகளை மட்டும் எடுத்து கழுவி காய வைக்கவும். இல்லை என்றால் முருங்கையை எடுத்து வந்து ஒரு துணியில் சுற்றி காலையில் வைத்தால் மாலை அனைத்து இலைகளும் உதிர்ந்து இருக்கும். அதனை எடுத்து சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
பின்னர் இதனை அறை வெப்பநிலையிலேயே 2 அல்லது 3 நாட்கள் வரை பொறுமொறுன்னு காய வைக்கவும். பின்னர் இதனை மிக்ஸியில் சேர்த்து பவுடர் மாதிரி அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பொடியை தனியே எடுத்து விட்டு. மிக்ஸி ஜாரில் கல் உப்பு, மிளகு, சீரகம் இவற்றையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அதோடு மீதி வைத்துள்ள முருங்கை இலையை சேர்த்து அரைக்கவும். நன்கு மைய அரைத்ததும் அதில் ஏற்கனவே அரைத்த பொடியை சேர்த்து அரைத்தால் அனைத்தும் கலந்து சுவையாக இருக்கும். இதனை சூடு ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம்.