முருங்கைக்கீரை ரசம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் அவர்களின் பாரம்பரிய முறையில் இந்த ரசத்தை எப்படி சுவையாக தயாரிப்பது என்று தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம்.
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 10 முதல் 15 காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்கவும். ஒரு கைப்பிடி மிளகு சேர்த்து வறுக்கவும். ஒரு கைப்பிடி சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும். 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும்.
ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம் தக்காளி - 3 (குக்கரில் 5-6 விசில் விட்டு வேக வைக்கவும்) தண்ணீர் - 500 மிலி முருங்கைக்கீரை - 100 கிராம் (சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும்) எண்ணெய் - 2 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 4 கடுகு - 1 தேக்கரண்டி பூண்டு - 10 பல் (நசுக்கியது) பச்சை மிளகாய் - 4 புளி கரைசல் - (50 கிராம் புளியை 150 மிலி தண்ணீரில் கரைக்கவும்) மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வெல்லம் - 1/2 தேக்கரண்டி கொத்தமல்லி - சிறிதளவு
ரசம் செய்யும் முறை:
100 கிராம் துவரம் பருப்பு, 3 தக்காளி மற்றும் 500 மிலி தண்ணீர் சேர்த்து குக்கரில் 5-6 விசில் விட்டு வேக வைக்கவும். 100 கிராம் முருங்கைக்கீரையை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி, 1 தேக்கரண்டி கடுகு, 4 காய்ந்த மிளகாய், 10 பல் நசுக்கிய பூண்டு மற்றும் 4 பச்சை மிளகாய் சேர்க்கவும்.
வேக வைத்த முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். வேக வைத்த பருப்பு மற்றும் தக்காளி கலவையை சேர்க்கவும். புளி கரைசல் (50 கிராம் புளியை 150 மிலி தண்ணீரில் கரைக்கவும்), 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 தேக்கரண்டி வெல்லம் சேர்க்கவும்.
அரைத்த பொடியை சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வதக்கிய முருங்கைக்கீரை கலவையை அரைத்து விழுதாக சேர்க்கவும். சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும். சிறிது நேரம் கொதிக்க வைத்து பரிமாறவும்.