ரத்த கொதிப்பை கட்டுப்படுத்தும் இந்த சூப்... இந்த நேரத்தில் இப்படி செஞ்சு சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன்
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை கீரை சூப்பை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருக்கிறது.
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை கீரை சூப்பை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு இருக்கிறது.
இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு இருக்கிறது என்று பலரும் தங்கள் அனுபவத்தில் சொல்வதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, காலை நேரத்தில் முருங்கைக் கீரை சூப் சாப்பிடும் போது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும் என்று அவர் கூறுகிறார்.
Advertisment
சித்த மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் இரத்தக் கொதிப்பை அதிகபட்ச பித்த நோயாக கருதுவதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பித்தத்தை சீராக்கும் ஆற்றல் முருங்கைக் கீரைக்கு இருக்கிறது.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைக் கீரையில் எவ்வாறு சூப் செய்து பருகலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
முருங்கைக் கீரை, சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, உப்பு மற்றும் தண்ணீர்
செய்முறை:
முதலில், 4 அல்லது 5 சின்ன வெங்காயம், 2 பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகு, தேவையன அளவு உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இந்தக் கலவையை முருங்கைக் கீரையுடன் சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் இருந்து இதனை இறக்கி வெதுவெதுப்பான சூட்டில் பருகலாம்.
நன்றி - CookWithSugu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.