கர்ப்பமாக உள்ள பெண்கள் இழுக்கும் ரத்த சோகையால் மூச்சு வாங்கும் பெண்களுக்கும் ஏற்ப சுவையான முருங்கைக்கீரை சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இரும்புச் சத்து அதிகம் நிறைந்த முருங்கைக்கீரை துவையல் ஈரோடு அம்மாச்சி சமையல் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பதாவது,
தேவையான பொருட்கள்
எண்ணெய்
மிளகு
சீரகம்
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வேர்க்கடலை
காய்ந்த மிளகாய்
பச்சை மிளகாய்
சின்ன வெங்காயம்
பூண்டு
கருவேப்பிலை
புதினா
கொத்தமல்லி
முருங்கை கீரை
உப்பு
எலுமிச்சை சாறு
தேங்காய் துருவல்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வறுத்த வேர்க்கடலை இரண்டு ஸ்பூன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வறுக்க வேண்டும்.
பின்னாடி இதில் காய்ந்த வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி பின்னர் வாசனைக்காக சிறிது புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்ததாக சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக் கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை உப்பு போட்டு வைக்கவும்.
இரும்பு சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரை துவையல்
இதில் தேங்காய் துருவலையும் சேர்த்து இலை நன்கு சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ளவும். இதனை வதக்கி ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதோடு சிறிது எலுமிச்சை பழம் சாறு சேர்த்து நன்கு மைய அரைக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் இதனை சிறிது எடுத்து சுடு சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.