முருங்கையில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. சிலர் வீடுகளில் இதை சாப்பிட குழந்தைகள் விரும்ப மாட்டார்கள் அப்படி இருக்கும் வீடுகளில் குழந்தைகளுக்கு பொடி செய்து கொடுக்கலாம்.
முருங்கைக்கீரை பொடி ஒன்றே போதும் உடலில் உள்ள பல பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். இது முடி உதிர்வு, இரத்த சோகை, உடல் சோர்வு என அனைத்து பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
இட்லி பொடி, பருப்பு பொடி மாதிரி இதை வீட்டில் செய்து வைத்தாலே போதும் அடிக்கடி சட்னி அரைக்க தேவையில்லை. இதை கெட்டுப்போகாமல் பல நாட்களுக்கு அப்படியே வைத்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை
கருவேப்பிலை
கருப்பு உளுந்து
வேர்க்கடலை
பாசிபயிறு
பாசிபருப்பு
கருப்பு எள்
வெள்ளை எள்
பாதாம்
எண்ணெய்
உப்பு பெருங்காயத்தூள்
பொட்டுக்கடலை
காய்ந்த மிளகாய்
கடலைப்பருப்பு
இட்லி
செய்முறை
முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலையை நிழலிலேயே வைத்து காய வைத்து எடுத்து கொள்ளவும். நன்கு காய்ந்து இலைகள் உடையும் பதத்தில் இருக்க வேண்டும். பின்னர் இதனை மிக்ஸி ஜாரில் பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் சிறிது எண்ணெய் ஊற்றி தனித்தனியாக வறுத்து ஒன்றாக அரைத்து எடுத்து முருங்கை பொடியுடன் கலந்து விடவும்.
அதில் சிறிது உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொண்டால் எப்போதும் போல சாதம், இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்
பின்னர் எப்போதும் போல இட்லி சுட்டு எடுத்து இதனை தாளிக்க வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் இட்லி மற்றும் அதன் மேல் முருங்கை பொடி தூவி கலந்து எடுத்தால் முருங்கை பொடி இட்லி ரெடியாகிவிடும்.
இட்லி சிறிது சிறிதாக மினி இட்லி வடிவில் இருந்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும். முருங்கைப்பொடியும் இட்லியில் நன்கு கலந்து மசாலா நிறைந்ததாக இருக்கும். இதை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் மாதிரியும் கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“