காலை உணவில் நம் உடலுக்கு தேவையான் புரதம் கொடுக்க கூடிய உணவுகள் இருக்க வேண்டும். காலை உணவில் நம் உடலில் 20 கிராம் புரதம் இருக்க வேண்டும்.
எனவே உடல் ஆரோக்கியமாகவும், சத்தாகவும் இருக்க உணவில் தினமும் போதுமான அளவு புரதம் இருக்க வேண்டும். இது அமினோ அமிலங்களால் ஆனது, நம் உடலுக்கு தேவையான அளவு புரதம் வழங்கக் கூடிய பல்வேறு இயற்கையான உணவு ஆதாரங்கள் உள்ளது. இதில் நாம் சாப்பிட வேண்டிய புரதங்கள் நிறைந்த உணவுகளைக் காணலாம்.
முக்கியமாக புரதம் முட்டை, நிலக்கடலை, பாதம், பிஸ்தா, பூசணி விதைகள், கீரைகள், சோளக்கருது, ஓட்ஸ், பால், வாழைப்பழம், கொய்யா, முளைக்கட்டிய பயிர்கள், பச்சை பயிர்கள், சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை, சியா விதைகள், ஃப்ளாக் சீட்ஸ் போன்றவற்றில் உள்ளது.
பால் பொருள்கள்: பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களில் புரதம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் பால் மற்றும் பால் பொருள்கள் நல்ல செரிமானம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த அளவை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், புரதம் தசைகளை வளர்க்க மற்றும் பராமரிப்பதற்கு உதவும்.
பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் புரதங்கள் நிறைந்த உணவாகும். இதனை ரொட்டி, சாலட் அல்லத் பராத்தா போன்ற பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். இவை ஒரு சிறந்த ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் நிறைந்த காலை உணவாகக் கருதப்படுகிறது.
பீன்ஸ் மற்றும் முளைக்கட்டிய பயறுகள் : தினந்தோறும் ஒரு கப் ராஜ்மா, சனா அல்லது வேறு சில பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதன் ஊட்டச்சத்து ஆற்றல் மையங்கள் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் புரதங்களை வழங்குகிறது.
முட்டைகள்: முட்டைகள் பொதுவாக பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருளாகும். இது வலுவான மற்றும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. எனவே தான் தினமும் ஒரு முட்டை உட்கொள்ள வேண்டும்.
நட்ஸ்: நட்ஸ் வகைகள் நாம் அனைவருமே சாப்பிட வேண்டிய ஒரு சிறந்த தின்பண்டமாகக் கருதப்படுகிறது. பொதுவாக நட்ஸ் வகைகளை நாம் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு நாம் பாதாம் போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதை அப்படியே சாப்பிட விரும்பாதவர்கள், இதை வறுத்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிடலாம்.
இவை அனைத்துமே புரதங்கள் நிறைந்த உணவாகும். இதை நம் அன்றாட உணவில் எடுத்து கொள்வதம் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“