முருங்கையில் இரும்புச் சத்து, கால்சியம் என அதிகப்படியான சத்துக்கள் உள்ளது. பாதாம் பிசினை போலவே முருங்கை பிசினும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். பாதாம் பிசின் போலவே முருங்கை பிசினையும் நாம் ஊற வைத்து தான் உண்ண வேண்டும்.
சத்துக்கள்: முருங்கை பிசினில் இரும்புச் சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
முருங்கை பிசின் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் இதயத்தை சீராகவும் வைக்க உதவுகிறது.
குறிப்பாக இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் உயிரியக்கக் கலவைகள் ஆரோக்கியமான இரத்த நாளங்களை ஊக்குவிப்பதன் மூலம் கொழுப்புச் சுயவிவரங்களை நிர்வகிப்பதன் மூலமும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். முருங்கை பிசின் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் பல நன்மகைளை செய்து உடலை நடுநிலையாக்க உதவுகிறது, இதனால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கிறது. அதனால் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்.
இந்த முருங்கை பிசினை எந்த முறையில் நாம் உட்கொண்டால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று பார்க்கலாம்.
முதல் நாள் இரவே இந்த முருங்கை பிசினை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்துவிட்டு நல்ல தண்ணீரை ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலையில் எழுந்து இந்த ஊறிய முருங்கை பிசினில் இருந்து ஒரு ஸ்பூன் மட்டும் எடுத்து ஒரு டம்ளரில் சேர்த்து வெதுவெதுப்பாக இருக்கும் சுத்தமான பசும்பாலை அதில் ஊற்றி நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருக வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“