எத்தனையோ பழங்கள் காய்களில் ஜூஸ் போட்டு குடித்து இருப்போம். ஆனால் இப்படி ஒரு ஜூஸ் குடித்து இருக்க மாட்டோம். அப்படிப்பட்ட கொத்தவரங்காய் ஜூஸ் எப்படி போடுவது என்று விஎஸ்என்கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
கொத்தவரங்காய் ஜூஸ் எடை குறைய உதவுகிறது. கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை பலப்படுத்தவும். பக்கவாதம் பிரச்சனை வராமல் தடுக்கும்.
தேவையான பொருட்கள்
கொத்தவரங்காய்
Advertisment
Advertisements
எலுமிச்சை சாறு
தேன்
உப்பு
மிளகுத்தூள்
செய்முறை
தேவையான அளவு கொத்தவரங்காயை எடுத்து மஞ்சள் தூள் உப்பு போட்டு நன்கு கழுவி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் மீண்டும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்து எடுத்து வடிகட்டவும். வடிகட்டி எடுத்த சாரில் சிறிது உப்பு, மிளகுத்தூள், அரை எலுமிச்சம் பழம் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.