நரம்புத் தளர்ச்சி என்பது நரம்புகள் பலவீனமடைந்து, உடலின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் செயல்கள் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. இது பொதுவாக கைகால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, வலி, பலவீனம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சில சமயங்களில், இது தசைச் சுருக்கங்கள், நடுக்கம், ஒருங்கிணைப்பு இழப்பு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.
இதுகுறித்து மருத்துவர் செங்கோட்டையன் டாக்டர் எஸ்.ஜே. ஹாட்டிவி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மூன்று உணவுகளை பற்றியும் கூறி இருக்கிறார்.
நரம்புத்தளர்ச்சி ஏற்படக் காரணங்கள்:
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
வைட்டமின்கள் குறைபாடு, அதிக அளவில் மது அருந்துதல் நரம்புகளை சேதப்படுத்தி நரம்புத்தளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதுபோன்ற பல காரணங்களால் நரம்புத் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் கூறுகிறார்.
இந்த 3 பொருள் முளைக்கட்டி உண்டால் நரம்புகள் இரும்பு பலம் பெறும்| மிக மிக எளிது|பயன்கள் பெரிது..|DrSJ
நரம்புதளர்ச்சி வராமல் தடுக்கும் உணவுகள்:
1. ஏதேனும் ஒரு பயிர், தானியம் மற்றும் வெந்தயம் எடுத்து முளைக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். 3 மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
2. உடற்பயிற்சி - ஒவ்வொரு நாளும் நடைபயிற்சி அவசியம். ஒரு நாளைக்கு 150 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அமர்ந்து வேலை செய்பவர்கள் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நடக்கவும்.
இவை அனைத்தியும் செய்து கொண்டே உணவில் தினசரி பன்னீர் திராட்சையை சாப்பிடுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வது நரம்பு தளர்ச்சி வராமல் தடுக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.