எட்டு கப் அளவிற்கு ரேஷன் புழுங்கல் அரிசியையும், 4 கப் அளவிற்கு பச்சரிசியை ஒன்றாக சேர்க்க வேண்டும். பின்னர், அதே ஒரு கப் அளவிற்கு உளுந்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கழுவிய உளுந்து மற்றும் அரிசியை சுமார் 5 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின்னர் முதலில் உளுந்தை மட்டும் கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். தண்ணீரை மொத்தமாக ஊற்றாமல் சிறிது சிறிதாக சேர்க்க வேண்டும். உளுந்தை கெட்டியாக அல்லாமல் மிருதுவாக மாவு பொங்கும் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், நன்றாக அரைக்கப்பட்ட உளுந்தை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் அரிசியை இரண்டு பாகங்களாக பிரித்து தனித்தனியாக கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு முறையும் ஒரு கை அளவிற்கு புதிதாக வடித்த சாதத்தை அரிசியுடன் சேர்க்க வேண்டும். அதன்படி, 12 கப் அரிசிக்கு இரண்டு கை சாதம் என்ற வீதம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி மாவை நன்றாக அரைத்த பின்னர், அத்துடன் உளுந்து மாவு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு கரண்டியால் சுமார் 5 நிமிடங்களுக்கு கலக்க வேண்டும்.
பின்னர், அடுத்த நாளுக்கு தேவையான மாவை பிரித்து எடுத்து, மாவு நன்றாக புளித்த பின்னர் 10 நிமிடங்கள் வேகை வைத்து எடுத்தால் மிருதுவான இட்லி தயாராகி விடும்.