என்னதான் சத்தான உணவு சாப்பிட்டாலும் அதை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பது அர்த்தம் இல்லை. சாப்பாடு சாப்பிடுவதற்கு தனியாக ஒரு பழக்கமே உள்ளது.
“தலை தித்திப்பு கடை கைப்பு” அதாவது உணவு சாப்பிடுவதற்கு முன் எப்போதும் இனிப்பு தான் சாப்பிட வேண்டும். பின்னர் தான் குழம்பு, அவியல், துவையல் என ஒவ்வொரு உணவாக சுவைக்க வேண்டும்.
உணவு சாப்பிடும்போது முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும். அதாவது தேன், இனிப்பான பழங்கள், வெள்ளத்தால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.
அப்போது தான் நாக்கில் உமிழ்நீர் சுரந்து சாப்பிட தூண்டும். அடுத்த அடுத்த உணவுகளை சுவைக்கும் ஆர்வமும் தூண்டும். உடலும் அதை ஏற்றுக்கொள்ளும். இல்லை என்றால் சாப்பிடுவதில் நாட்டம் இருக்காது. மேலும் சரியான உணவை எடுத்து கொள்ளவும் முடியாது.
எனவே சாப்பிடும் போது முதலில் இனிப்பு பின்னர் குழம்பு, காய் என சாப்பிட்டு இறுதியாக ஜீரணத்திற்கு உதவும் மிளகு சீரகம் போட்ட ரசம் குடிக்க வேண்டும். இந்த வரிசையில் தான் உணவு எடுத்து கொள்ள வேண்டும்.
இப்படித்தான் சாப்பிட வேண்டும்!
மேலும் இப்போதெல்லாம் எங்கு சாப்பிட்டாலும் முதலில் சூப் குடிக்கும் கலாச்சாரம் உள்ளது அது மிகவும் தவறு. சாப்பாட்டிற்கு முன் சூப் குடிப்பதால் வயிற்று புண் ஏற்படும். வெறும் வயிற்றில் காரமாண உணவை சாப்பிடுவது என்பது பல்வேறு வயிறு தொடர்பான பிரச்சனைகளை கொடுக்கும்.
அந்த வரிசையில் சாப்பிடும் போது பேசக்கூடாது, படுத்து கொண்டே சாப்பிடக்கூடாது, நின்று சாப்பிடக்கூடாது என்று தான் அந்த காலத்தில் இருந்து கடைபிடித்து வருகிறோம். ஆனால் இன்றைய சூழலில் பலர் நின்று கொண்டு சாப்பிடுவதை வழக்கப்படுத்தி வருகிறார்கள். அதனால் ஜீரணம் அடைவதில் சிரமம் ஏற்படும்.
எனவே அந்த காலத்தில் இருந்து நாம் பின்பற்றும் முறையையே பின்பற்ற வேண்டும். அதாவது பத்மாசனத்தில் அமர்ந்து நாம் சாப்பிடும் போது ஜீரணம் சக்தி நன்றாக இருக்கும்.
சத்தான உணவு சாப்பிடுகிறோம் என்பதையும் தாண்டி அதனை எந்த வரிசையில் எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமாகும் என்று சித்த மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“