ஒரு 25 ஆண்டுகளுக்கு முன் ஓட்ஸ் ஒரு உணவு என்றே நம் மக்களுக்கு தெரியாது. அது குதிரை லாயத்துக்கு பெரும் பண்ணைக்கு வாங்கி குதிரைக்கு போடக்கூடிய உணவாகத்தான் பார்க்கப்பட்டது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
ஒரு அவலில் இத்தனை ரசாயனங்களா? | Dr. Sivaraman speech in Tamil | Oats | Aval Food | Health awareness
ஆனால் தற்போது நிறைய வீடுகளின் சமையல் அறையில் ஃபிளேக்ஸ் என்பது இருக்கிறது. அதிகம் பஸ் நுழையாத இடத்தில் கூட ஓட்ஸ் பாக்கெட் இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் இதுகுறித்து சிவராமன் கூறுகையில், “அன்றைய நாட்களில் கூட அவல் அனைவராலும் சாப்பிடப்பட்டது. ஆனால் தற்போது நம் சந்தைக்கு வரக்கூடிய ஓட்ஸ் நல்ல தானியம் கிடையாது.
ஏனென்றால் அது ஓட்ஸ் அவல். அதாவது ஒரு தானியம் அவலாக மாறுவதற்கு நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளது. தானியத்தை 80 டிகிரி செல்சியஸில் வேகவைத்து அதை 100 டன் எடையுள்ள தட்டையால் அடித்து அதில் உள்ள நீர் சத்துக்களை எடுத்து வெறும் சக்கையில் தேவையான சத்துக்களை சேர்த்து விற்கப்படுகிறது”.
அதுவும் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு ஒரு ரசாயனம், வாசம் வருவதற்கு ஒரு ரசாயனம் மேலே பளபளப்பாகவும் உதிர்வதற்கும் ஒரு ரசாயனம் அது இல்லாமல் அது நிறைந்து வரும் ஒரு பாக்கெட்டிலும் நைட்ரஜன் காற்று என சேர்க்கப்படுகிறது. இப்படி தான் மார்க்கெட்டுக்கு வரும் ஒவ்வொரு ஓட்ஸ் பாக்கெட்டும் தயார் செய்யப்படுகிறது.
அதனை நாம் சாப்பிடும் போது நிறைய உடல் உபாதைகள் ஏற்படும். அன்றைக்கு செய்த அவல் இயற்கை ஆகவும் பாரம்பரிய முறையிலும் செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு வரும் அவலில் நிறைய குப்பைகளும் வணிகம் ரீதியான நோக்கமும் தான் உள்ளது” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“