நாள்பட்ட நோய்களை குணப்படுத்த உதவும் ஒமேகா 3… எதில் அதிகமா இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர் சிவராமன்
மீன்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் என்னென்ன? ஒமேகா 3 அமிலங்களின் நன்மைகள் என்னென்ன? அளவில்லா சுவையையும், அளவில்லா சத்துகளையும் உள்ளடக்கிய மீனின் பயன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
மீன்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் என்னென்ன? ஒமேகா 3 அமிலங்களின் நன்மைகள் என்னென்ன? அளவில்லா சுவையையும், அளவில்லா சத்துகளையும் உள்ளடக்கிய மீனின் பயன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
நாள்பட்ட நோய்களை குணப்படுத்த உதவும் ஒமேகா 3… எதில் அதிகமா இருக்கு தெரியுமா? விளக்கும் மருத்துவர் சிவராமன்
மீன் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் என்னென்ன? ஒமேகா 3 அமிலங்களின் நன்மைகள் என்னென்ன? அளவில்லா சுவையையும், அளவில்லா சத்துகளையும் உள்ளடக்கிய மீனின் பயன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.
Advertisment
குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலுடன் புத்திக் கூர்மையை கொடுக்கும் உணவு மீன்தான் என்கிறார் மருத்துவர் சிவராமன். நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக் கூடிய புரதம் உடலில் நோயெதிர்ப்பு தன்மையை அதிகரித்து, உடலை கட்டமைக்கிறது. இதனால், வெளிப்புறத்தில் இருந்து பரவக்கூடிய நோய்களை எதிர்த்து நிற்கக் கூடிய நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. அந்த வகையில், புரதங்களுக்கான மிகச்சிறந்த தேர்வாக அமைகிறது மீன்கள். இயற்கை காய்கறில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் அளவுக்கு மீன்களிலும் புரதகங்கள் அதிகம் உள்ளது என்கிறார் மருத்துவர் சிவராமன்.
மீன்கள் சாப்பிடும்போது ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலச்சத்து உடலுக்கு கிடைக்கிறது. நம்முடைய உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாக திகழ்வதுதான், ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும். உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் இந்த ஒமேகா-3 பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் என்பது உடலுக்கு தேவையான பாலி அன்சாச்சுரேட் கொழுப்பு அமிலங்கள் ஆகும். கடல் உணவு, மீன், நட்ஸ் போன்ற பல உணவுகள் மூலம் இதனை பெற முடியும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.
மீன்களின் மருத்துவ பயன்கள் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. நாள்பட்ட நோய்களான சர்க்கரைநோய், ரத்த கொதிப்பு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஒமேகா-3ல் இருக்கக் கூடிய ஆண்டி ஆக்சிடென் மிக அவசியமாகிறது. வீட்டு சமையலில், செக்கு நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றில் சிறிதளவே ஒமேகா-3 உள்ளது. எனவே, மாதத்திற்கு 4 முறை உணவில் மீன்களை சேர்க்க வேண்டும். இதனால், நாள்பட்ட நோய்கள் தீரும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் சிவராமன்.