இரண்டு வெங்காயத்தை வைத்து அம்மா கையால் சாப்பிட்ட சட்டி சோறு சுவையாக செய்துவிடலாம். பேச்சிலர்ஸ் எல்லாருமே இந்த ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணலாம். ரொம்ப ஈஸியா சீக்கிரமா செய்யலாம். இந்த பதிவில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சமைத்த அரிசி 2 கப்
வெங்காயம் 2
பூண்டு 5
மிளகாய் 1
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
கலந்த மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
மட்டன், சிக்கன், பிரியாணி அல்லது கரம் மசாலா 3/4 தேக்கரண்டி
மிளகு மற்றும் சான்ஃப் தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலைகள்
உப்பு போதும்
சர்க்கரை சிட்டிகை
எண்ணெய் 3 டீஸ்பூன்
முட்டை 2 (விரும்பினால்)
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் வதங்க இதனுடன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன் அடுப்பை சிம்மில் வைத்து கொஞ்சம் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு, சோம்புத்தூள் மற்றும் மசாலா எதையேனும் சேர்த்து மசாலா பச்சை வாசம் நீங்கும் வரை வதக்க வேண்டும்.
பின்னர் இதில் கருவேப்பிலை கொஞ்சம் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். இதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்னர் ஒரு மிளகாய், கொத்தமல்லி தழை கலந்து இதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளற வேண்டும்.
அடுப்பின் பிளேமை அதிகரித்து வைத்து பிரைடு ரைஸ் பதத்திற்கு நன்கு கிளறி விடவும். முட்டை சாப்பிட விருப்பம் இருப்பவர்கள் வெங்காயம் வதக்கும் போதே முட்டையையும் போட்டு வதக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“