நமது சமையலறையில் உள்ள எளிய பொருட்கள் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அதுவும் இன்றைக்கு பெரும்பாலானோர்க்கு பெரும் சிக்கலாக இருக்கும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்றால் சிறப்பு தானே. அத்தகைய எளிய உணவுப் பொருள் குறித்து இப்போது பார்ப்போம்.
இன்றைய உலகில், நீரிழிவு நோயால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகில் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்: சுகர் பேஷன்ட்ஸ் ப்ளீஸ் நோட்… உடற்பயிற்சிக்கு முன்பு நீங்க இதை சாப்பிடணும்!
”நீரிழிவு நோய்களில் மிகவும் பொதுவானது டைப்-2 நீரிழிவு நோய், பொதுவாக பெரியவர்களில் இது இன்சுலினை எதிர்க்கும் போது அல்லது போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது ஏற்படுகிறது. கடந்த மூன்று தசாப்தங்களில், டைப்-2 நீரிழிவு நோயின் பரவலானது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. டைப்-1 நீரிழிவு, இன்சுலின் சார்ந்த நீரிழிவு என அழைக்கப்படுகிறது, இது ஒரு நாள்பட்ட நிலையாகும், இதில் கணையம் இன்சுலினை சிறிதளவு உற்பத்தி செய்கிறது அல்லது உற்பத்தி செய்யாமல் உள்ளது" என்று WHO அறிக்கை கூறுகிறது.
அதனால்தான் நம் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நமது உணவு மற்றும் வாழ்க்கை முறையை தொடர்ந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் எளிய வெங்காயம் உதவுகிறது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சமையலறையில் பொதுவாகக் கிடைக்கும் பொருட்களில் ஒன்றான வெங்காயம் பல ஆரோக்கிய நலன்களின் களஞ்சியமாக உள்ளது. வெங்காயத்தில் போதுமான அளவு ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் மனித உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
நீரிழிவு எதிர்ப்பு மருந்து மெட்ஃபோர்மினுடன் எடுத்துக் கொள்ளும்போது, வெங்காய குமிழ் சாறு அதிக இரத்த சர்க்கரை மற்றும் மொத்த கொழுப்பின் அளவை "வலுவாக குறைக்கும்" என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் மெடிசினல் ஃபுட் இதழில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வில், வெங்காயத்தில் இரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் கலவைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.
ஆரோக்கியமான நீரிழிவு உணவு கட்டுப்பாட்டில் வெங்காயத்தை எவ்வாறு சேர்ப்பது என்று இப்போது நீங்கள் ஆச்சரியப்படலாம். 'சுற்றுச்சூழல் ஆரோக்கிய நுண்ணறிவு' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெங்காயம் பச்சையாகவும், புதியதாகவும் உட்கொள்ளும் போது நம் உடலில் சிறப்பாகச் செயல்படும். "புதிய வெங்காயத்தின் நுகர்வு டைப் -1 மற்றும் டைப் -2 நீரிழிவு நோயாளிகளிடையே இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைத்தது" என்று ஆய்வு கூறுகிறது.
எனவே, வெங்காயத்தை சாண்ட்விச், சூப், சாலட் அல்லது உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். ஆனால் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், மிதமானது முக்கியமானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil