பெண்களுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றி டாக்டர் யோக வித்யா எத்னிக் ஹெல்த்கேர் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (Urinary Tract Infections - UTIs) பெண்களிடையே மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு சுகாதாரப் பிரச்சினையாகும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
Advertisment
பெண்களின் சிறுநீர்க்குழாய் ஆண்களை விடக் குறைவான நீளம் கொண்டது. இதன் காரணமாக, பாக்டீரியா சிறுநீர்ப்பையில் வேகமாகவும் எளிதாகவும் சென்றடைய முடியும். பெண்களில் சிறுநீர்க்குழாய் திறப்பு ஆசனவாய்க்கு மிக அருகில் அமைந்துள்ளது. மலத்தில் காணப்படும் ஈ. கோலி (E. coli) போன்ற பாக்டீரியாக்கள் எளிதில் சிறுநீர்க்குழாய்க்குள் நுழைய இது வழிவகுக்கிறது.
கழிப்பறையை உபயோகித்த பிறகு தவறான முறையில் கழுவுவது (முன்னிருந்து பின்னோக்கி அல்லாமல், பின்னிருந்து முன்னதாகக் கழுவுவது) ஆசனவாயில் உள்ள பாக்டீரியாக்களை சிறுநீர்க்குழாய்க்குள் கொண்டு செல்லக்கூடும்.
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தெரு உணவுகள் அல்லது மாசுபட்ட நீர் உட்கொள்வது உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அறிமுகப்படுத்தலாம், இது UTI-க்கு வழிவகுக்கும். சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பது பாக்டீரியாக்கள் பெருக வழிவகுக்கும். மழை நேரத்தில் சாலை ஓரங்களில் இருக்கும் பானி பூரி சாப்பிடுவது கூட இதற்கு வழி வகுக்கும். போதுமான தண்ணீர் குடிக்காதது சிறுநீரின் அடர்த்தியை அதிகரித்து, பாக்டீரியாக்களை வெளியேற்றுவதை கடினமாக்கலாம் என்று டாக்டர் யோகவித்யா கூறுகிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.