வீட்டுல ஒரு கப் பொட்டுக்கடலை இருக்கா? வாயில் வைத்தவுடன் கரையும் ஸ்வீட் செஞ்சு அசத்துங்க!

வீட்டில் இருக்கும் பொட்டுக்கடலையை வைத்தே சுவையான ஸ்வீட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வீட்டில் இருக்கும் பொட்டுக்கடலையை வைத்தே சுவையான ஸ்வீட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
பொட்டுக்கடலை

பொட்டுக்கடலையில் ஸ்வீட்

பொட்டுக்கடலை உட்பட 4 பொருட்களை வைத்து வாயில் வைத்ததும் கரையக்கூடிய ஒரு ஸ்வீட் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்

வறுத்த பொட்டுக்கடலை - 1 கப்
வெல்லம் - 2 கப்
தண்ணீர் - 2 கப்
நெய்-5ஸ்பூன்
சமையல் எண்ணெய் - 3 ஸ்பூன்

ஒரு கடாயில் தேவையான அளவு பொட்டுக்கடலை எடுத்து வறுக்கவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் நன்கு மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

Advertisment
Advertisements

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து துருவிய வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து அது சூடானதும் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு கரைக்கவும்.

அடுப்பை சிம்மில் வைத்து பாகு பதத்திற்கு கரைத்து அதில் வெல்லம் நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிக்ஸ் செய்யவும்.  வெள்ளம் தண்ணீர் பொட்டுக்கடலை மாவுடன் சேர்த்து அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி விடலாம். பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு ஸ்வீட் வந்ததும் இறக்கி விடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Peanuts and its health benefits Cooking Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: