தினமும் 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட சாப்பிடலாம் என்பார்கள். உணவில் இருக்கும் நஞ்சை வெளியேற்ற கூடிய சக்தி மிளகுக்கு உண்டு. புற்றுநோய் வராமல் தடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார். அவ்வளவு நன்மைகள் நிறைந்த மிளகு வைத்து மிளகு சாதம் செய்வது பற்றி ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
ஒரு மிக்ஸி ஜாரில், மிளகு மற்றும் சீரகத்தை எடுத்து கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சில முந்திரி சேர்க்கவும்.
அவை வறுத்தவுடன், மெல்லியதாக நறுக்கிய பூண்டு மற்றும் ஒரு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். கீறிய பச்சை மிளகாய் மற்றும் சில கறிவேப்பிலை சேர்க்கவும். உப்பு சேர்த்து கலக்கவும்.
அரைத்த மிளகு, சீரகத்தூள் சேர்த்து மீண்டும் கலக்கவும். வேகவைத்த சாதத்தை சேர்த்து, அனைத்தையும் நன்கு கலக்கவும். மேலும் சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். சுவையான மிளகு சாதம் நன்றாகவும் சூடாகவும் பரிமாற தயார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.