உடல் தங்கம் போல மினுமினுக்க பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட வேண்டும் என மருத்துவர் சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின் ஏ, சி, பி உள்ளது. இவற்றை வாரத்தில் 2 முறை தொடர்ந்து சாப்பிட்டு வர கண் கோளாறுகள் நீங்கும் என மருத்துவர் கூறுகிறார்.
கண் இமைகளில் ஏற்படும் அழற்சி, கண்களில் எற்படும் நாள்பட்ட அழற்சி மற்றும் வெண்படல அழற்சி, கண் இமை வீக்கத்தை குணப்படுத்த இந்த கீரையை இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
மேலும் பார்வை குறைதல் போன்ற அனைத்து கண் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்தும் தன்மை இந்த கீரைக்கு உண்டு.
Advertisment
Advertisements
பொன்னாங்கன்னி கீரை ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும். மேலும் பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி அழகு மேம்படும்.
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு அடையும் இதனால் நம்மால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். சிவப்பு பொன்னாங்கன்னியில் சத்துகள் மிக அதிகமாக காணப்படுகின்றன. இவற்றை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட வேண்டும்.
இவற்றில் அன்டி ஆக்சிடென்ட்ஸ் அதிகமாக இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். பொன்னாங்கன்னி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் மூலம் இரசாயனம் கலந்த கீரைகள் வாங்குவதை தடுக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இரும்புச் சத்து பொன்னாங்கன்னி கீரையில் நிறைந்திருக்கிறது. முதுமையில் நோய்களை தடுக்க வேண்டுமானால் இளமையிலேயே பொன்னாங்கன்னி கீரையை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.