கண்ணாடிக்கு குட்பை சொல்லுங்க... இந்தக் கீரையில் கூட்டு இப்படி செஞ்சு சாப்பிடுங்க; பார்வை ஷார்ப் ஆகும்!
பொன்னாங்கண்ணி கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தக் கீரையை கூட்டு செய்து சாப்பிடும் போது சுவையாகவும் இருக்கும்; உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
பொன்னாங்கண்ணி கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தக் கீரையை கூட்டு செய்து சாப்பிடும் போது சுவையாகவும் இருக்கும்; உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
அனைத்து கீரை வகைகளிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. நம் உடலை உறுதியாக்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல்வேறு ஊட்டச்சத்துகள் கீரை வகைகளில் இருக்கின்றன. அதில் பொன்னாங்கண்ணி கீரையில் இருக்கும் நன்மைகளை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Advertisment
பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று மருத்துவர் ஷர்மிகா விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, ஆண்களின் விந்தணுக்களை அதிகரித்து, அதன் தரத்தை உயர்த்த பொன்னாங்கண்ணி கீரை உதவுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஆண்மைக் குறைவு பிரச்சனையையும் இது சரி செய்வதாக கூறப்படுகிறது.
இதேபோல், ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரின் சருமத்தை பொலிவாக்கும் தன்மை பொன்னாங்கண்ணி கீரையில் இருக்கிறது. இதேபோல், சிறுநீரக கற்களை கரைக்கவும் இது உதவி செய்கிறது. மேலும், கண் பார்வையை கூர்மையாக்கும் தன்மையும் இதில் இருக்கிறது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரமாக கணினியை பயன்படுத்தி கண்களில் வறட்சி ஏற்பட்டவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை எடுத்துக் கொண்டால் அவை குணமாகும். சைனசைட்டிஸ், வறட்டு இருமல் மற்றும் மலச்சிக்கல் போன்ற நிறைய பிரச்சனைகளுக்கு பொன்னாங்கண்ணி கீரை தீர்வாக அமைகிறது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இத்தகைய நன்மைகள் இருக்கும் பொன்னாங்கண்ணி கீரையை வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் துருவல் ஆகியவை சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். அதே சமயத்தில் நம்முடைய ஆரோக்கியமும் மேம்படும்.
நன்றி - VSN Kitchen Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.