புரதம் அதிகம் சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா - நிபுணர்கள் விளக்கம்

உயர் யூரிக் அமில அளவு கீல்வாதம், சிறுநீரக கற்கள் மற்றும் மூட்டுவலி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

உயர் யூரிக் அமில அளவு கீல்வாதம், சிறுநீரக கற்கள் மற்றும் மூட்டுவலி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

author-image
WebDesk
New Update
knee pain

உடலில் புரதச்சத்துக்கும் யூரிக் அமிலத்தின் அளவுக்கும் நேரடி தொடர்பு இருக்கிறது என்று நிறைய பேர்  நம்புகின்றனர். ஆனால் அதன் உண்மை என்ன என்று பார்ப்போம். 

Advertisment

இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் அமிதா காத்ரே, யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாகுறதுக்கு காரணம் பியூரின்கள் அதிகமா இருக்கிற உணவுதான், புரதம் இல்லை. "பியூரினும் புரதமும் சுண்ணாம்புக்கும் சீஸுக்கும் இருக்கிற வித்தியாசம் மாதிரிதான். அதனால் புரதம் அதிகமா இருக்கிற சாப்பாட்டை பயப்படாம சாப்பிடலாம். ஆனா, அளவா சாப்பிடுறது ரொம்ப முக்கியம்" என்று அவங்க இன்ஸ்டாகிராம்ல சொல்லியிருக்காங்க.

டாக்டர் ஹரிச்சரன் ஜி, மூத்த ஆலோசகர் மருத்துவர் மற்றும் உள் மருத்துவத் துறை தலைவர், கிளிநாகில்ஸ் மருத்துவமனை, லக்டிக்காபுல், ஹைதராபாத், யூரிக் அமிலம் பியூரின் வளர்சிதை மாற்றத்தின் விளைபொருள்னு கூறியிருக்கிறார். பியூரின்கள் நிறைய உணவுகள்ல இருக்கு, சில உயர் புரத உணவுகள்லயும் இருக்கு. "ஆனா, எல்லா புரதமும் ஒரே மாதிரி பிரச்சனை கொடுக்காது"ன்னு டாக்டர் ஹரிச்சரன் கூறுகிறார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க க்ளிக் செய்யவும்.

Advertisment
Advertisements

முக்கியமா, பியூரின்கள் உடையும்போது உருவாகுற ஒரு வேதிப்பொருள் தான் யூரிக் அமிலம். "யூரிக் அமிலத்தின் அளவு அதிகமா இருந்தா கீல்வாதம், சிறுநீரக கற்கள், மூட்டுவலி போன்ற உடல்நல பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கு"ன்னு டாக்டர் ஹரிச்சரன் கூறுகிறார். 

சிவப்பு இறைச்சி, உறுப்பு இறைச்சிகள் மற்றும் சில வகையான கடல் உணவுகள் போன்ற விலங்கு புரதங்கள்ல பியூரின்கள் அதிகமா இருக்கு. இது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். "இந்த உணவுகளை குறைக்கிறதுனால யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தலாம். தாவர அடிப்படையிலான புரதங்கள் (பீன்ஸ், பருப்பு வகைகள், மற்றும் டோஃபு போன்றவை) பொதுவாக பியூரின்கள் குறைவாகவே இருக்கும். அதனால யூரிக் அமிலத்தின் அளவை அதிகமா உயர்த்துறதுக்கான வாய்ப்பு குறைவு"ன்னு டாக்டர் ஹரிச்சரன் தெரிவிக்கிறார். 

பியூரின்கள் அதிகமாக இருக்கிற உணவுகளை குறைக்கிறது முக்கியம்னாலும், புரதத்தையே முழுசா தவிர்க்கிறதுனால ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் தசை இழப்பு ஏற்படலாம். "உங்களுக்கு யூரிக் அமிலத்தின் அளவு அதிகமா இருந்தா, புரதத்தை முழுசா தவிர்க்க வேண்டியதில்லை. 

ஆனா, நீங்க சாப்பிடுற புரதத்தின் வகைகளையும் அளவையும் கவனமா பார்க்குறது முக்கியம். சில புரத உணவுகள், குறிப்பா பியூரின்கள் அதிகமா இருக்கிறவை, யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம்"னு மூத்த உணவு நிபுணர் ரியா தேசாய், வோக்கார்ட் மருத்துவமனை, மீரா ரோடு விளக்குகிறார். 

அதற்கு பதிலாக மிதமான அளவில் பியூரின்கள் குறைவா இருக்கிற புரத உணவுகள் (பால் பொருட்கள் மற்றும் சில தாவர அடிப்படையிலான புரதங்கள்) இருக்கிற ஒரு சமச்சீர் உணவில் கவனம் செலுத்துங்கள். கூடவே, நல்லா தண்ணி குடிக்கிறது, மது மற்றும் சர்க்கரை பானங்களை குறைக்கிறது ரொம்ப முக்கியம். ஏன்னா இதுவும் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்.

டாக்டர் ஆஷிஷ் சௌத்ரி, நிர்வாக இயக்குனர், மூத்த ஆலோசகர், மற்றும் எலும்பியல் மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர், ஆகாஷ் ஹெல்த்கேர், ரத்தத்துல யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க மது, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கணும்னு சொல்றாரு. கூடவே சிவப்பு இறைச்சி சாப்பிடுவதையும் குறைக்க சொல்கிறார்.

பியூரின்கள் அதிகமா இருக்கு உணவுகளின் பட்டியல்:

  1. சிவப்பு இறைச்சி: மாட்டிறைச்சி, ஆடு, பன்றியிறைச்சி.
  2. உறுப்பு இறைச்சிகள்: கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்பு இறைச்சிகள்.
  3. சில கடல் உணவுகள்: Anchovies, sardines, mussels, மற்றும் scallops.
  4. சர்க்கரை பானங்கள்: சோடா மற்றும் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் இருக்கிற இனிப்பு பானங்கள் யூரிக் அமிலத்தின் அளவை அதிகமா உயர்த்தலாம்.
  5. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமா இருக்கிற உணவுகளும் யூரிக் அமிலத்தை அதிகரிக்கலாம்.
  6. மது: மது, குறிப்பா பீர் மற்றும் வடிகட்டிய மதுபானங்கள் யூரிக் அமிலத்தின் அளவை உயர்த்தலாம். "ஒயின் பொதுவாக குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஆனாலும் அதை அளவா குடிக்கணும். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods with more protein content Causes of high uric acid levels in your body

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: