புரதச்சத்து உடலுக்கு அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது தசைகள் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. கடைகளில் கிடைக்கும் புரதப் பொடிகளுக்கு மாற்றாக, இயற்கையான உணவுப் பொருட்கள் மூலமாகவே நமக்குத் தேவையான புரதத்தைப் பெறலாம் என்று டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
புரதம் நிறைந்த உணவுகள்:
நிலக்கடலை சோயா வெள்ளை கொண்டைக்கடலை மீன் முட்டை கோழி இந்த உணவுகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் புரதத் தேவையை பூர்த்தி செய்யலாம்.
புரதம் வெறும் தசை வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், பல முக்கிய உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது.
Advertisment
Advertisements
நோய் எதிர்ப்பு சக்தி: புரதம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. புரதச்சத்துள்ள உணவுகள் உடலில் அமினோ அமிலங்களாக மாறி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
உறுப்புகளின் செயல்பாடு: எலும்பு மஜ்ஜை, இரும்பு மற்றும் கல்லீரல் போன்ற உடலின் முக்கிய உள்ளுறுப்புகள் சீராக செயல்பட புரதச்சத்து அத்தியாவசியமானது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.