வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ, பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையில் எப்படி லட்டு செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 500 கிராம்
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு அகலமான கடாயில், வேர்க்கடலையை சிவக்க வறுக்கவும். வெந்ததும் ஒரு தட்டில் மாற்றி ஆறவிடவும்.
ஆறியதும் தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் மாற்றவும். வறுத்த வேர்க்கடலையை மிக்சி ஜாரில் போட்டு, பல்ஸ் மோடில் அரைக்கவும். பாதி அரைபட்டதும், வெல்லத் தூள், ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலக்கவும்.
வேர்க்கடலை லட்டு | Peanut Ladoo in Tamil | High Protein Snacks | Sweet Recipes | Ladoo Recipes
மீண்டும் பல்ஸ் மோடில் அரைக்கவும். பின்னர் நிலக்கடலை, வெல்லம் கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
அடுத்ததாக இதனை நமக்கு பிடித்த அளவில் வட்ட உருண்டைகளாக லட்டு மாதிரி பிடித்தால் அவ்வளவு தான் சுவையான வேர்க்கடலை லட்டு தயார்.
காற்றுப்புகாத பாத்திரத்தில் ஈரம்படாமல் வைத்தால் போதும் ஒரு வாரம் வரை தாங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.