முட்டையை விட அதிக புரதச் சத்து; இந்த சைவ உணவுகளை மிஸ் பண்ணாதீங்க; டாக்டர் பொற்கொடி
முட்டையை விட புரதச் சத்து அதிகமாக இருக்கும் சில சைவ உணவுகளை மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். இதனை தினசரி சாப்பிடலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
முட்டையை விட புரதச் சத்து அதிகமாக இருக்கும் சில சைவ உணவுகளை மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். இதனை தினசரி சாப்பிடலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
பெரும்பாலும் அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு புரதச் சத்து எளிதாக கிடைத்து விடும். குறிப்பாக, முட்டையில் இருந்து அதிகப்படியான புரதம் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால், சைவ உணவில் இருக்கும் புரதச் சத்து குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லை.
Advertisment
அதனடிப்படையில், எந்த வகையான சைவ உணவுகளில் அதிகப்படியான புரதச் சத்து நிறைந்திருக்கிறது என்று மருத்துவர் பொற்கொடி விளக்கம் அளித்துள்ளார். மேலும், முட்டையை விட அதிகமான புரதச் சத்து நிறைந்த உணவுகளின் பட்டியலை அவர் தெரிவித்துள்ளார்.
வறுத்த கொண்டை கடலையில் அதிகமான புரதச் சத்து இருக்கிறது. இதன் மேல் தோலை நீக்காமல் சாப்பிட்டால் தான் சத்து முழுமையாக கிடைக்கும். இதனை அரைத்து பொடியாக்கி இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
இது தவிர பச்சை பட்டாணியிலும் நிறைய புரதம் இருக்கிறது. கூடுதலாக, அனைத்து விதமான அமினோ ஆசிட்ஸும் இதில் காணப்படுகிறது. இதை ஊறவைத்து, வறுத்த கொண்டை கடலையுடன் சேர்த்து அரைத்து ஸ்மூத்தி போன்று தயாரித்து குடிக்கலாம்.
Advertisment
Advertisements
இதேபோல், கருப்பு உளுந்திலும் தேவையான அளவு புரதம் இருக்கிறது. இதனை உயர் ரக தாவர வகையிலான புரதம் என்று அழைப்பார்கள் என மருத்துவர் பொற்கொடி கூறுகிறார். இதில் புரதம் தவிர நார்ச்சத்து மற்றும் கால்சியமும் இருக்கிறது. இதனை கஞ்சி போன்று சமைத்து சாப்பிடலாம்.
வேர்க்கடலையில் புரதம், வைட்டமின் இ, வைட்டமின் பி, ஃபைபர்,மெக்னீஷியம் ஆகியவை இருக்கின்றன. தினசரி ஒரு கப் வேர்க்கடலை எடுத்துக் கொள்வதன் மூலம் இந்த சத்துகள் அனைத்தும் நமக்கு எளிதாக கிடைத்து விடும்.
எனவே, இந்த நான்கு உணவுகளையும் நாள்தோறும் சாப்பிட்டு வந்தால், நம் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைத்து விடும் என்று மருத்துவர் பொற்கொடி அறிவுறுத்துகிறார்.
நன்றி - Dr.Porkodihari Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.