புரதம் நமது உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். புரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, பசியைக் குறைக்க, எடையைக் கட்டுப்படுத்தும் பல ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பசி ஹார்மோன்களின் அளவைக் குறைக்கவும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
அவ்வளவு சத்துக்கள் நிறைந்த கட்டாயம் நம் உணவில் இருக்க வேண்டிய புரத உணவுகள் என்ன என்று பார்ப்போம்.
பால் பொருள்கள்:
பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களில் புரதம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பால் மற்றும் பால் பொருள்கள் நல்ல செரிமானம் மற்றும் குறைந்த இரத்த அழுத்த அளவை ஊக்குவிக்க உதவுகிறது. புரதம் தசைகளை வளர்க்கவும் பராமரிப்பதற்கும் உதவுகிறது.
பருப்பு வகைகள்:
அதிக புரதச் சத்து நிறைந்த பருப்பு வகைகளை தனியாக சாப்பிடாமல் சாதம், சப்பாத்தி மற்றும் குழம்பு வகைகளில் சேர்த்து சாப்பிடலாம். பெரும்பாலும் இதை காலையில் இட்லி தோசையுன் சேர்த்து சாப்பிடலாம்.
Adding this 4 Protein Foods in your diet is very Important!!
முட்டைகள்
விலை குறைவாகவும் எல்லோருக்கும் எளிமையாகவும் அதிகம் புரதம் நிறைந்த உணவுகளில் ஒன்றாகவும் புரதம் உள்ளது. அதிக புரதம் முட்டையில் உள்ளது. உடலில் தசை வளர்ச்சியை விரும்புபவர்கள் முட்டை அதிகம் எடுத்து கொள்ளலாம். வளர்ச்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடு போன்ற முக்கிய அமைப்புகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
இறைச்சி, மீன்:
இறைச்சி, கோழி மற்றும் மீன் ஆகியவற்றில் அதிக அளவிலான புரதம் உள்ளது. அசைவ உணவு உண்பவர்கள் போதுமான புரதத்தை எளிதில் பெற முடியும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அசைவம் சாப்பிடுவதாலேயே நல்ல புரதத்தை பெற முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.