தேவையான பொருட்கள்
பச்சரிசி
உருளைக்கிழங்கு
தக்காளி
பச்சை மிளகாய்
பெரிய வெங்காயம்
குடைமிளகாய்
துருவிய கேரட்
கருவேப்பிலை
துருவிய இஞ்சி
பெருங்காயத்தூள்
உப்பு
சோடா உப்பு
கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு கப் அளவு பச்சரிசியை நான் முதல் ஐந்து மணி நேரம் ஊறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும். பின்பு வேகவைத்த உருளைக்கிழங்கையும் மசித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
பின்னர் இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதனுடன் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், குடைமிளகாய், துருவிய கேரட், கருவேப்பிலை, துருவிய இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு, சோடா உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் இதனை வைத்து எப்போதும் போல தோசை கல்லில் தோசை ஊற்றி சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி, முட்டை தொக்கு போன்ற எந்த குருமா மற்றும் சட்னி சேர்த்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“