நெல் அரிசிக்கு பதிலாக தினை அரிசி சாப்பிடுவது உடலுக்கு அவ்வளவு நல்லது. தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் தினை அரிசியில் நிறைந்துள்ளது.
தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை தினமும் சாப்பிட்டு வர உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்களை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைக்க உதவும். இது கண் ஆரோக்கியம் மற்றும் முடி வளர்ச்சிக்கும் உதவும்.
தினை அரிசியில் புரதம், கால்சியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, தயாமீன், ரிபோப்ளோவின், நியாசின், மற்றும் அதிகப்படியான அமினோ அமிலங்களும் உள்ளன.
இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கண்ணாடி போட வேண்டிய அவசியம் வராது | Dr.Sivaraman - Eye health -திணை
உடற்பயிற்சி மற்றும் கடினமான வேலை செய்பவர்களுக்கு மிகச்சிறந்த உணவு திணை அரிசியாகும். இதில் தசைகளுக்கும், எலும்புகளுக்கு அவசியமான புரதம் மற்றும் கால்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளது.
தினை அரிசியில் கண்களுக்கு நன்மையளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனால் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதனால் பார்வை தெளிவடையும்.
அதுமட்டுமின்றி தினைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. இது எடை இழப்பு மற்றும் செரிமானத்திற்கு உதவியாக உள்ளது.
தினைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கும். இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன.
நீரிழிவு நோயைத் தடுப்பது, குடலில் வீக்கத்தை நிர்வகித்தல், முதுமையைத் தடுப்பதை ஊக்குவித்தல் மற்றும் ஆரோக்கியமான செல்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல நன்மைகளும் தினை அரிசியில் உள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.