சிறு தானியங்களை வாங்கும் போது எப்படி வாங்க வேண்டும்? எப்படி சமைக்க வேண்டும்? எந்த நேரங்களில் சாப்பிட வேண்டும் ?எந்த முறைகளில் எல்லாம் அதை சாப்பிட வேண்டும்? என்பது பற்றி பார்ப்போம்.
சிறுதானியங்கள் சாப்பிடும் போது பொதுவாகவே நாம் ஆறு தவறுகள் செய்கிறோம். அது என்ன என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுவது பற்றி பார்ப்போம்.
சிறுதானியங்களோட பயன்பாடு சமீப காலங்களில் அதிகமாக இருக்கு அது மட்டுமின்றி சிறுதானியம் என்றால் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் தான் என்று சொல்கிறார்கள் ஆனால் சிறுதானியம் என்பது எல்லாருமே எடுத்துக் கொள்ளலாம்.
1. சிறு தானியங்களை எப்படி பார்த்து வாங்குவது: பெரும்பாலும் அரிசியை தவிர்க்க சொல்வதற்கு அதை பாலிஷ் செய்யும் போது பெரும்பாலான சத்துக்கள் நமக்கு கிடைப்பது இல்லை என்பதாலேயே அதேபோல சிறு தாணியங்களும் பாலிஷ் செய்யாததை வாங்கி பயன்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் மற்றும் சின்ன சின்ன கடைகளில் கிடைக்க கூடிய பட்டை தீட்டப்படாத சிறுதானியங்களை நன்கு கழுவி பயன்படுத்தலாம்.
2. எப்படி சமைப்பது: கடைகளில் இருந்து வாங்கி வந்ததற்கு பிறகு எப்படி சமைக்க வேண்டும் என்று பார் பிறகு சாமை திணை குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை சமைக்கும் போது இரவே ஊற வைக்க வேண்டும் சுமார் 8 முதல் 10 மணி நேரம் அது நன்கு ஊற வேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளும் வராது சீக்கிரம் ஜீரணமாக. ஒருவேளை ஊற வைக்காமல் சமைத்தால் வயிறு உப்பசம் போன்ற பிரச்சனைகள் வரும்.
3.எந்த நேரம் எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்: ஆரம்ப காலத்தில் சாப்பிடுபவர்கள் மதிய நேரத்தில் சிறுதானியத்தை எடுத்துக் கொள்ளலாம். நாட்கள் நகர எதாவது ஒரு வேளை ஒரு நாளைக்கு ஒருமுறை சாப்பிடுவது நல்லது.
நீரிழவு நோயாளிகள் இந்த 6 சிறுதானிய தவறை செய்யாதீர்கள் | 6 millet mistakes
4. சிறுதானியங்களை குக்கரில் சமைக்கலாமா? : முடிந்தவரை சிறு தானியங்களை வடித்து சாப்பிடுவது தான் நல்லது. அதற்கு வாய்ப்பு இல்லாத சமயங்களில் குக்கரில் வைத்து சாப்பிடலாம்.
5. கூலாக குடிக்கலாமா?: நீரிழிவு நோயாளிகள் கூலாகவோ கஞ்சாவோ குடிக்கக்கூடாது. ஆனால் முழுசாதமாக வடித்து அதை நொதிக்க வைத்து குழப்பி குடிக்கலாம் முழு தானியங்களாக போட்டு குழைய விட்டு கஞ்சாக எடுத்துக் கொள்ளலாம்.
6.சத்துமாவு, பிஸ்கட் வடிவில் சாப்பிடலாமா? : சிறுதானியம் அரைத்துதான் பொதுவாக பிஸ்கட் சத்து மாவு செய்வோம். சிறு தானியத்தை அரைத்தாலே அதில் உள்ள சத்துக்கள் போய்விடும். அதனால் அரைத்து அதை பயன்படுத்தக் கூடாது. முழு தானியங்களாக எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.
7. மாவு: சிறுதானியங்களை மாவாக மாற்றும் போது கால்சியம் தாதுக்கள் போன்ற நல்ல சத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. ஒரு நாளைக்கு ஒரு தானியம் எடுத்துக் கொள்ள பாருங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.