மிக அதிகமாக சூரிய ஒளியை கிரகிக்கும் இலை இது; தினமும் சாப்பிட்டா இவ்ளோ நன்மை: சத்குரு
வெற்றிலையில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து சத்குரு விளக்கம் அளித்துள்ளார். இதனை சாப்பிடுவதன் மூலம் நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிலையில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து சத்குரு விளக்கம் அளித்துள்ளார். இதனை சாப்பிடுவதன் மூலம் நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிலையில் ஆச்சரியமான பல நன்மைகள் இருக்கின்றன என்று சத்குரு தெரிவித்துள்ளார். அதன்படி, வெற்றிலைக்கு அதிகபட்ச சூரிய ஒளியை கிரகிக்கும் ஆற்றல் இருக்கிறது எனவும், இதனை தண்ணீரில் போட்டால், இதன் தண்டு எப்போதும் வடக்கு திசை நோக்கி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவில் நச்சுத்தன்மை ஏதேனும் இருந்தால், அதனை எடுக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு இருக்கிறது என சத்குரு கூறுகிறார். எனவே, சாப்பிட்டு முடித்ததும் வெற்றிலையை எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை மக்கள் கடைபிடித்தனர்.
வெற்றிலையுடன் ஒரு அங்குலமாவது காம்பு இருந்தால் தான், அது வீரியமாக வேலை செய்யும். காம்பை முற்றிலும் வெட்டி விட்டால், இது முழு பலன் அளிக்காது. நரம்பு மண்டலத்தை தூண்டும் திறன் வெற்றிலைக்கு இருக்கிறது. இதனால் நரம்பியல் செயல்பாடுகள் சிறப்பாக இயங்கும்.
வெற்றிலை அதிகப்படியான சூரிய ஒளியை உறிந்து கொள்வதால், நிழலில் வளரும் தன்மை இதற்கு இருக்கிறது. வயிறு நிறைய சாப்பிட்ட பின்னர், ஒரு வெற்றிலையை எடுத்துக் கொண்டால் அது உங்களை தூங்க விடாது என்று சத்குரு தெரிவித்துள்ளார். ஆனால், இவை பதற்றமான உணர்வையும் கொடுக்காது. இவை நரம்பு மண்டலத்தை மென்மை ஆக்குகிறது.
Advertisment
Advertisements
அதனடிப்படையில், மருத்துவ குணங்கள் நிறைந்த வெற்றிலையை சாப்பிடுவதன் மூலம் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று சத்குரு தெரிவித்துள்ளார்.
நன்றி - Sadhguru Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.