5 கிராம் எள்ளு, நீரில் ஊற வைத்து... சுகர் பிரச்னைக்கு எவ்ளோ ஈஸி தீர்வு பாருங்க! | Indian Express Tamil

5 கிராம் எள்ளு, நீரில் ஊற வைத்து… சுகர் பிரச்னைக்கு எவ்ளோ ஈஸி தீர்வு பாருங்க!

எள்ளில் காப்பர், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி, ஈ மற்றும் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. எள் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் உள்பட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

5 கிராம் எள்ளு, நீரில் ஊற வைத்து… சுகர் பிரச்னைக்கு எவ்ளோ ஈஸி தீர்வு பாருங்க!

சர்க்கரை உள்ளவர்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியமாகும். உணவு பழக்க வழக்கத்திலும் மாற்றம் கொண்டு வருவர். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சில எளிய முறைகளும் பின்பற்றப்படுகின்றன. அந்த வகையில் எள்ளு சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். நீரில் ஊற வைக்கும் போது கருநிற தோள் வெந்நிறமாகும். பின் அதைத் எடுத்து, காய வைத்து கடாய்யில் போட்டு வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டு கிளறி எடுக்கவும்.

ஆறவிட்டு சிறிய உருண்டை செய்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு உருண்டை சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் செய்ய வேண்டும். சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் எனக் கூறுகின்றனர். இந்தநேரத்தில் இனிப்பு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எள்ளில் காப்பர், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி, ஈ, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து நிறைந்துள்ளது. எள் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்பட்டு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சுவாச மண்டலம், எலும்பு ஆரோக்கியத்தை பேணுகிறது. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்கிறது. கொழுப்பின் அளவை குறைக்கிறது.

வைட்டமின் பி1, பி6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அதிக அளவு உள்ளது. இது நம் உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான அளவில் 25 சதவீத தேவையை பூர்த்தி செய்கிறது. எள்ளில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.

மாதவிடாய் வருவதற்கு முன் உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு உப்புசம், மார்பகங்களில் வலி, தலை வலி, உடல் கனத்து போதல் போன்றவை எள் சாப்பிடுவதால் குறைகிறது. மாதவிடாய் வந்த 15 நாட்களுக்கு பின் எள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய்யின் போது வலி குறையும் என்று கூறுகின்றனர். எள்ளில் உள்ள புரதச்சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது எனக் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Sesame health benefits

Best of Express