உடம்பில் கொழுப்பு மற்றும் சக்கரை அளவை சீராக்க சின்ன வெங்காயம் சாப்பிட வேண்டும் என சித்த மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
சின்ன வெங்காயம் நம் அன்றாட உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வரும் ஒன்று. இந்த சின்ன வெங்காயத்தில் அவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதுதொடர்பாக சித்த மருத்துவர் அளிக்கும் தகவல்களை இப்போது பார்ப்போம்.
காலையில் வெறும் வயிற்றில் 3-4 சின்ன வெங்காயத்தை மென்று தின்றால் உடலில் கொழுப்பு அதிகரிக்க விடாமல் தடுக்கும். சின்ன வெங்காயம் குறித்த 1000க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன. கொழுப்புச் சத்துடன் கூடிய உணவுகளுடன் வெங்காயம் சாப்பிட்டால், உடலில் கொழுப்பு அதிகரிப்பதை வெங்காயம் தடுக்கிறது.
சின்ன வெங்காயம் பித்தத்தைக் கட்டுப்படுத்தும். மேலும் உடலில் உள்ள வீக்கம், வலி போன்றவற்றை தடுக்கும் தன்மைக் கொண்டது. உடலில் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறனும் சின்ன வெங்காயத்திற்கு உண்டு.
அரிப்பு, அழற்சி, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும். உடலில் அழற்சி ஏற்படுவதற்கு காரணமாக சிஸ்டமின் உருவாவதை வெங்காயம் தடுக்கும்.
கோடைக்காலத்தில் காலை உணவுக்குச் சிறந்தது கம்பங்கூழ் தான். குளிர்ச்சியான கம்பங்கூழுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால், அபரிமிதமான குளிர்ச்சி தன்மை கிடைக்கும். உடல் குளிர்ச்சியாக உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. கம்பங்கூழ் பைல்ஸ் எனப்படும் மூலம் பிரச்சனையை தடுக்கும். இவ்வாறு சூரியன் எஃப்.எம் நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
சின்ன வெங்காயம் கொழுப்ப குறைக்குமா ஆச்சரியமா இருக்கே #SuryanFM #doctors #weightloss #Benefits #weightlosstips #weightlossgoals #fatburner
Posted by SuryanFM on Friday, May 3, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“