ரத்த கொதிப்பு மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு சீரகத் தண்ணீர் குடிப்பது சிறந்தது என சித்த மருத்துவர் சிவராமன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளதாவது; வயிற்றுப் புண்ணை ஆற்ற சீரகத் தண்ணீர் தினமும் குடிப்பது நல்லது. அதற்கு, அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் அதில் 3 ஸ்பூன் சீரகத்தை போட்டு வறுத்து விடுங்கள். பின்னர் அதில் 2 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும். உணவு அருந்திய பின்னர் குடிக்கும் தண்ணீராக இந்த சீரகத் தண்ணீரை குடிக்க வேண்டும்.
அடுத்ததாக, சீரகத்தை வறுத்து அரைத்து பொடியாக செய்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும் வயிற்று புண் ஆற உதவும். இதுதவிர சில சித்த மருந்துகள் குடல் புண் உள்ளிட்ட வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் இரத்த கொதிப்பும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“