பெண்களின் இரத்தசோகை பிரச்சனையை சரிசெய்ய சிறுதானியமான கம்பு சாப்பிடுவது சிறந்தது என சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
நம்முடைய பாரம்பரிய சிறுதானியங்களில் ஒன்று கம்பு. கம்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் பல்வேறு விட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
இந்தநிலையில், கம்பு பெண்களின் இரத்தசோகைக்கு தீர்வாக இருக்கும் என சித்த மருத்துவர் சிவராமன் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இந்தியாவில் 75%க்கும் அதிகமான பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தசோகைக்கு மிக முக்கிய காரணம், நம் அன்றாட உணவில் இரும்புச்சத்து இல்லாதது தான். இதனால் இரும்புச்சத்தை மாத்திரையாக வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அன்றாட உணவாக எடுத்துக் கொள்ளக் கூடிய கம்பு உணவில் அவ்வளவு இரும்புச்சத்து உள்ளது. கம்புவை பஜ்ரா என்று கூறுவார்கள்.
கம்புவை நாம் கம்பு தோசையாக, கம்பு கூழ், கம்பு மோர் வெங்காயமாக சாப்பிட்டால் இரும்புச்சத்தும், கூடவே கால்சியம் சத்தும் அதிகமாக கிடைக்கிறது. இவ்வாறு சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“