மாப்பிள்ளை சம்பா அரிசி சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல, கேன்சருக்கும் சிறந்தது என சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
மாப்பிள்ளை சம்பா அரிசியின் சிவப்பு நிறம் சாதாரண விஷயம் கிடையாது. அதில் லைக்கோபீன் என்ற சத்து உள்ளது. இந்த லைக்கோபீன் சத்து தக்காளி பழத்தின் தோலிலும் உள்ளது. மேலும் மிளகாய் வற்றல் மற்றும் மாதுளை பழத்தில் உள்ளது சிவப்பிலும் லைக்கோபீன் சத்து உள்ளது.
இந்த லைக்கோபீன் சத்தை பிரித்து எடுத்து புற்றுநோய்க்கு உண்டான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக ஆண்களுக்கான ப்ரோஸ்டேட் கேன்சர் வருவதை தடுப்பதற்கான ஆற்றல் சிவப்பு நிறத்தில் உள்ளது. அதாவது மாப்பிள்ளைச் சம்பா அரிசியின் சிவப்பு நிறத்தில் உள்ளது. ப்ரோஸ்டேட் கேன்சர் என்பது ஆண்களுக்கு மட்டும் வரும் புற்றுநோயாகும். அதாவது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ப்ரோஸ்டேட் வீக்கமடைந்து சிறுநீர் பாதையை சற்று அழுத்தும். அதுவே புற்றாக மாறினால், உடல் முழுவதும் பரவும் அபாயம் உள்ளது. இந்த புற்றுநோய் வருவதை தடுக்க மாப்பிள்ளை சம்பா அரிசியின் சிவப்பு நிறம் உதவுகிறது.
மாப்பிள்ளை சம்பா அரிசி சர்க்கரை வியாதிக்கும் நல்லது. எனவே நாம் தினமும் சாப்பிடலாம். சுவையும் மருத்துவ குணமும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“