வீட்டில் இட்லி மாவு இருக்கா? டேஸ்டி பால் பணியாரம் செய்றது ரொம்ப ஈஸி!
Paal paniyaram with idli batter in tamil:
வீட்டில் இருக்கும் இட்லி, தோசை மாவைக் கொண்டு பால் பணியாரம் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Paal paniyaram with idli batter in tamil:
வீட்டில் இருக்கும் இட்லி, தோசை மாவைக் கொண்டு பால் பணியாரம் எப்படி எளிதில் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Tips for Tasty Paal paniyaram in tamil: மாலை நேரத்தில் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என்ன ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம் என்று ஆழ்ந்த சிந்தனையில் உள்ளவர்களுக்கு பால் பணியாரம் நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த டேஸ்டி பலகாரத்தை தயார் செய்ய நேரம் அதிகமாக செலவாகும் என்பது தான் உண்மை. ஆனால் வீட்டில் இருக்கும் இட்லி, தோசை மாவைக் கொண்டு இவற்றை எளிதில் தயார் செய்து விடலாம். இப்போது இட்லி மாவில் எப்படி பால் பணியாரம் தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
Advertisment
சுவையான பால் பணியாரம் செய்யத் தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – ஒரு கப் தேங்காய் – 1 சர்க்கரை – 150 கிராம் ஏலக்காய் பொடி – ஒரு ஸ்பூன் ஆப்ப சோடா மாவு – அரை ஸ்பூன் எண்ணெய் – 1/4 லிட்டர்.
Advertisment
Advertisements
டேஸ்டி பால் பணியாரம் சிம்பிள் ஸ்டெப்ஸ்:
பால் பணியாரம் தயார் செய்ய முதலில் தேங்காய் பால் தயார் செய்து கொள்ளவும்.
பிறகு அந்த தேங்காய் பாலில் 150 கிராம் சர்க்கரை, ஒரு ஸ்பூன் ஏலக்காய்த்தூள், மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர், ஒரு கப் இட்லி மாவில் அரை ஸ்பூன் ஆப்ப சோடா மாவு, அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.
மாவு கெட்டியான பதத்தில் இல்லை என்றால், அவற்றுடன் சிறிதளவு அரிசி மாவு சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கலந்து கொள்ளவும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுக்கவும்.
இவை நன்கு பொறிந்ததும் வேறு தட்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.
இப்படி, அனைத்து உருண்டைகளையும் நன்றாக பொறித்து எடுத்த பின்னர், அவற்றை தேங்காய் பாலில் சேர்த்து நன்கு ஊற வைத்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த டேஸ்டியான மற்றும் சூப்பரான பால் பணியாரம் ரெடியாக இருக்கும். அவற்றை நீங்கள் சுவைத்து மகிழலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil