சுரைக்காயில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் மற்றும் நீர்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. சுரைக்காயில் குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. மேலும், இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு, பசி உணர்வை தடுக்கவும் உதவும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சுரைக்காய் ஒரு சிறந்த உணவாகும். சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு சிறுநீரக கற்கள் வராமலும் தடுக்கும்.
இப்படியாக மருத்துவ குணங்கள் நிறைந்த சுரைக்காயை வைத்து காலை டிபனுக்கு ஒரு ரெஸிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய்
அரிசி மாவு
கேரட்
வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
சீரகம்
பெருங்காயத்தூள்
மிளகுத்தூள்
உப்பு
அரிசி மாவு
கொத்தமல்லி தழை
கடுகு
சீரகம்
வெள்ளை எள்
எண்ணெய்
செய்முறை
ஒரு சுரைக்காய் எடுத்து நறுக்கி தோல் சீவி விட்டு நடுவில் உள்ள விதை பகுதிகளையும் நீக்கிவிட்டு துருவி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கலந்து சீரகம் பெருங்காயத்தூள், மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் அதில் அரிசி மாவு சேர்த்து சிறிதாக தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு கலந்து எடுத்துக் கொள்ளவும். அதை மேலே பொடியாக நறுக்கிய சிறு கொத்தமல்லி தலைகளை தூவி கலந்து விடவும்.
சுரைக்காய் வைத்து இப்படி ஒரு தடவ டிபன் செஞ்சு பாருங்க
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெள்ளை எள் சேர்த்து அதன் மேல் இந்த மாவை ஊற்றி தோசை மாதிரி உலாவி விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக விட்டு எடுத்தால் தோசைக்கு மாறாக ஒரு டிபன் ரெடியாகிவிடும்.
சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கலைப் போக்கவும் உதவும். இவ்வளவு நன்மைகள் கொண்ட சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பல நன்மைகளைப் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“