/indian-express-tamil/media/media_files/2025/04/23/u5BO60h4OroY2r4aLcAl.jpg)
ஊட்டச்சத்துக்களை வாரி வழங்கும் தேன் நெல்லிக்காய்!
இன்றைய உணவு பழக்கவழக்கங்கள் எண்ணற்ற பல உடல் நல பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்துகிறது. எந்தளவிற்கு உணவு பழக்கவழக்கங்களை முறையாகப் பின்பற்றுகிறோமோ? அந்தளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். அத்தியாவசிய ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், சிறு தானியங்கள் போன்றவற்றை சாப்பிட்டாலும் நொறுக்குத் தீனிகளைக் குறைக்க வேண்டும்.
ஒருவேளை திண்பன்டங்கள் சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் வீட்டிலேயே செய்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். இன்றைக்கு உடலுக்கு வலுச்சேர்க்கும் நெல்லிக்காயை.வைத்து தேன் நெல்லி எப்படி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்..
தேன் நெல்லிக்காய் செய்முறை:
உடலுக்கு பல்வேறு ஆற்றலை வழங்கும் தேன் நெல்லிக்காய் செய்வதற்கு முதலில் ப்ரெஷ்ஷான நெல்லிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து நெல்லிக்காயை நறுக்காமல் அதில் குண்டூசியை வைத்து சிறுசிறு முழுவதுமாக குத்த வேண்டும். பின்னர் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சுத்தமான தேனை ஊற்றி ஊற வைக்கவும். இரவு முழுவதும் ஊற வைத்து பின்னர் காலையில் சாப்பிடவும். 24 மணி நேரத்திற்கு மேலாக பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
ஒருவேளை வாரத்திற்கு இருமுறை கூட செய்வதற்கு நேரம் இல்லாதவர்கள் நெல்லிக்காயை வேகவைத்து தேனில் ஊற்றி வெயிலில் காய வைக்கவும். வாரத்திற்கு 2 நாள்களாவது கண்ணாடி பாட்டிலில் ஊற வைத்த தேன் நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.
தேன் நெல்லிக்காயின் பயன்கள்:
தேன் நெல்லிக்காயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எவ்வித அச்சமும் இன்றி சாப்பிடலாம். எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. மாறாக நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு , உடலில் ரத்த அணுக்களின் அளவையும் அதிகரிக்கிறது. மேலும் இதயத்தில் உள்ள தசைகள் வலுப்படுவதோடு இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
தேன் மற்றும் நெல்லிக்காய் இரண்டிலுமே வைட்டமின் சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் சருமத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. இதோடு நெல்லிக்காயில் உள்ள குறைந்த கலோரிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவற்றை உட்கொள்வதால் உடலின் செரிமான அமைப்பு சீராவதோடு உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதையும் தடுக்கிறது. மேலும் மலச்சிக்கல், அஜீரண கோளாறுகளையும் தடுக்க உதவுகிறது. நாம் சாப்பிடக்கூடிய நெல்லிக்காயில் வைட்டமின் சி ஊட்டத்துக்கள் அதிகளவில் உள்ளதால் நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இரும்புச்சத்தை அதிகரிக்கிறது என்கிறார் மருத்துவர் சிவராமன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.